அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் கொரோன தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தது. அதன் பின்ன பல நாடுகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், உலக நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்ப பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:- 

"அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். புறநோயாளிகளுக்கென்று தனியாக காய்ச்சல் பிரிவை ஏற்படுத்த வேண்டும். இதனை பொது மருத்துவத்துறை, நுரையீரல் மருத்துவத்துறையுடன் இணைந்து செயல்படுத்துவது அவசியமாகும்.

நோயாளிகளை அவர்களின் உடல் நிலை அடிப்படையில் தனித்தனியாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுக்கு பொது மருத்துவம் மற்றும் சுவாச நோய் துறை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் உதவி பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்க வேண்டும். 

அத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழிகாட்டுதல்களின்படி சிகிச்சை மேற்கொண்டு அவர்களது உடல்நிலை தொடர்பான தகவல்களை அறிய வேண்டும்.

மேலும், இந்த நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பொது மருத்துவர்கள் சுவாச நோய் துறை மருத்துவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப ஆக்சிஜன் இருப்பு வைத்திருப்பது மிகவும் அவசியம். 

பரிசோதனை கருவிகள் போதிய அளவில் இருப்பதையும், மருத்துவமனைகளில் படுக்கைகளையில் தாயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

மருந்து-மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்கள் போன்றவை தட்டுபாடிலல்லாமல் இருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Outpatients coming to govt hospitals must be tested.


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->