பழனி: பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி! பொதுமக்கள் மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


பழனி முருகன் கோவிலில் பொதுதரிசனத்தில் செல்லும் பக்தர்கள் மட்டும் நீண்ட நேரம் நின்றபடி காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன:

திண்டுக்கல்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக இருக்கும் பழனி முருகன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். 

கோவிலில் பக்தர்களுக்கு பொது தரிசனம், ரூ.10 கட்டண தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் என பலமுறைகளில் சென்று சாமியை வழிபடுகின்றனர். 

ரூ.100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தரிசன நேரம் வரும் வரை காத்திருப்பு அறையில் உள்ள எல்.இ.டி. டிவி, மின்விசிறிகள், இருக்கைகளில் அமர்ந்து தரிசனத்திற்கு செல்கின்றனர். 

அதே போல் ரூ.10 கட்டண தரிசனத்தில் செல்லும் வழியிலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு காத்திருப்பு அறையில் 1,000 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால், பொதுதரிசனத்தில் செல்லும் பக்தர்கள் மட்டும் நீண்ட நேரம் நின்றபடி காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். 

இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில், பொதுதரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக இருக்கை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதனால் பொதுதரிசன வரிசையில் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை இல்லாததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palani Murugan temple seating facility


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->