கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை - அதிர்ச்சியில் பழனி பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிர்தம், லட்டு, முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இதனை வாங்கிச் செல்கின்றனர். 

இதில் ஒன்றான பஞ்சாமிர்தத்திற்கு ஜிஐ டேக் என்ற புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், 15 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில், தயாரிப்பு தேதி இல்லாமல் காலாவதியாகிய பின்னரும் விற்பனை செய்யப்படுவதாக ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை நிர்வாகி செந்தில் குமார் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். 

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பழநி முருகன் கோயிலில் இன்று சோதனை நடத்தினர். பின்னர் அந்த பிரசாதங்களை ஆய்வுக்காக அவர்கள் எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் இன்று வரை விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாகவும், இதனை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரசாதம் கெட்டுப்போன சம்பவம் முருக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palani temple prasathams expiry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->