சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த இளைஞர் மீது பாய்ந்த வழக்கு!  - Seithipunal
Seithipunal


பல்லடம் அருகே சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து உண்ணாவிதம் மேற்கொண்ட நபர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்த கொடுமை அரங்கேறி உள்ளது.

பல்லடம் அடுத்த சின்னியகவுண்டம்பாளையத்தில் தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.

இந்த டாஸ்மார்க் பாரில் தமிழக அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக கலப்பட மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறி, பனிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு, அதே கிராமத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ் என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

மேலும், மரக்காணத்தில் நடந்த விஷச்சாராய மரண சம்பவத்தை போன்று, சின்ன கவுண்டம்பாளையத்திலும் நடைபெறாமல் இருக்க, இந்த சட்ட விரோத மது விற்பனையை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்.

வித்ய பிரகாஷ் நடத்திய இந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் குறித்து, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கோரி வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palladam block market tasmac sale issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->