அதிகாலையில் வந்த பரபரப்பு செய்தி: ஜெய்பீம் பட பாணியில் விசாரணை.....
Palladam triple murder case
பல்லடம் மூவர்க் கொலை வழக்கு தொடர்பாக 18 தனிப்படைகள் அமைத்த விசாரணையில் எந்தத் தகவலும் கிடைக்காததால், குறவர்ச் சமூகத்தை சேர்ந்தவர்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி மிரட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி மூன்று பேரைக் கொடூர கொலைச் செய்யப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பாகத் திருப்பூர் மாவட்ட காவல்துறைச் சார்பாக, 18 தனிப் படைகள் அமைத்துத் தற்போது வரை விசாரணையானது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணையில் ஆஜராகி வெளியே வந்த நபர்களைச் சந்தேகப்பார்வையில், காவல்துறையினர் எங்களைத் துன்புறுத்துவதாகவும் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட காவல்துறையினர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையின் படி, ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் அடிப்படையில் தான் விசாரணைச் செய்து வருவதாகவும், சிலர் இந்த வழக்கைத் திசை திருப்பும் நோக்கில் இதுபோன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் தவறு செய்யாதவர்கள் என்றால் எதற்காகப் பயப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் காவல் துறையினர்க் கூறியுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு சரியான முறையில் நடைபெற்று வருவதாகவும், முழுக்க முழுக்கக் குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்கும் நோக்கத்தில் தான் காவல்துறையினர்ச் செயல்பட்டு வருகின்றனர்.
மாவட்ட காவல்துறைச் சார்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை திசைத் திருப்பும் நோக்கில் தான் நடைபெறுகிறது என்று காவல்துறையினர்க் கூறியுள்ளனர்.
English Summary
Palladam triple murder case