ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்! லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி!
panchayat union office Confiscation money Anti bribery department
சேலம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 3 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக வெங்கடேசன் என்பவரும் கிராம ஊராட்சிக்கான வட்டார வளர்ச்சி அலுவலராக உமாசங்கர் என்பவர் உள்பட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளிக்கு பணம் வசூலித்து வருவதாகவும் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் தொகை கேட்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், தலைவர், துணைத் தலைவர், அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்களின் கார்கள், தலைவரின் கார், அலுவலர் அறையில் தனியாக ஒரு குழு ஆய்வு நடத்தி விசாரணை செய்தனர்.
விசாரணையின் முடிவில் கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 3500 கைப்பற்றப்பட்டது. இந்த பணம் பல்வேறு பணிகளுக்காக விடப்பட்ட டென்டரில் கைமாற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றப்பட்டு முறை கேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
panchayat union office Confiscation money Anti bribery department