சொந்த மக்களை விரட்டியடிக்கும் தமிழக அரசு?! ஆந்திராவிடம் அடைக்கலம் கோரும் பரந்தூர் தமிழக மக்கள்!
Paranthur Airport issue Ekanapuram village people new protest
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தங்களை அப்புறப்படுத்த நினைக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், தமிழக மக்களுக்கு தங்களின் நிலை குறித்து புரிய வைக்கவும், தமிழ்நாட்டை விட்டே வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் ஒரு அதிர்ச்சி முடிவை கையில் எடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் அமைய உள்ள புதிய பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி கிராம மக்கள் ஒன்றரை வருடத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து, அதிர்ச்சி போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து, நிலம் எடுக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு உள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கிராம மக்கள், பக்கத்து மாநிலமான ஆந்திர மாநில அரசிடம் தஞ்சம் கேட்க முடிவு செய்துள்ளனர்.
வருகின்ற திங்கட்கிழமை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு தஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மனு அளிக்க உள்ளதாகவும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர், விவசாய நல கூட்டமைப்பு போராட்டக் குழு அறிவித்துள்ளது.
சுமார் 690 நாட்களுக்கு மேலாக தங்கள் சொந்த நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று போராடிவரும் ஏகனாபுரம் கிராம மக்கள், தங்களின் நிலை குறித்து தமிழக மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், தமிழக அரசுக்கு தலையில் கொட்டு வைக்கும் விதமாகவும் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும், ஏகனாபுரம் கிராம மக்களின் இந்த முடிவை எண்ணி தமிழக மக்கள் தலைகுனிய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Paranthur Airport issue Ekanapuram village people new protest