கன்னியாகுமரி || மகனைக் கொன்று விட்டு பெற்றோர்கள் தற்கொலை - கடிதத்தில் வெளிவந்த உண்மை.!
parents sucide after kill son in kanniyakumari
கன்னியாகுமரி || பெற்ற மகனைக் கொன்று விட்டு பெற்றோர்கள் தற்கொலை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் முகிலன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முரளீதரன். என்ஜினீயரான இவர், தக்கலை அருகே சரல்விளை பகுதியில் உள்ள சக்திநகரில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவருடைய மகன் ஜீவா மனவளர்ச்சி குன்றி காணப்பட்டதால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும், மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் முரளீதரன் வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், முரளீதரன் நேற்று முன்தினம் மகனை கொன்று விட்டு, தனது மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முன்று பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு முரளீதரன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது முரளீதரன் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அந்தக் கடிதத்தில், "மனவளர்ச்சி குன்றிய எனது மகன் ஜீவாவின் உடல் நிலை சரியாக தொடர்ந்து சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்தேன். அதன் படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.
அப்போது, எனது மகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உங்கள் மகன் அதிக நாட்கள் உயிர்வாழ போவதில்லை என்று தெரிவித்தார்கள். இதனால், மனமுடைந்த நானும், எனது மனைவியும் தற்கொலை செய்ய முடிவு செய்தோம்.
தாங்கள் இறந்த பின்பு மகன் அநாதை ஆகிவிடுவான் என்று நினைத்து அவனையும் கொலைச் செய்துவிட்டோம்" என்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
parents sucide after kill son in kanniyakumari