பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள்: இந்திய துணை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!
parliament election deputy election commissioner consulting officers
பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமானவரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியின் கூடுதல் தேவை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வருமானவரித்துறை எவ்வளவு பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் தேர்தல் நேரங்களில் நடைபெறும் முன்னேற்பாடுகளை தடுப்பது, பண பட்டுவாடா, ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிவடைந்ததும் சென்னையில் தங்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி நாளை காலை மீண்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
English Summary
parliament election deputy election commissioner consulting officers