சம்மதிக்குமா திமுக? தனிச்சே அறிவித்த துரை. வைகோ! - Seithipunal
Seithipunal


வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் என்று, அக்கட்சியின் தலைமை கழக பொதுச்செயலாளர் துரை வைகோ அறிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்துவோம்.

இந்த பேச்சுவார்த்தையில் திமுக கொடுக்கும் சீட்டின் அடிப்படையில், பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். 

எங்களின் இப்போதைய ஒரே கொள்கை, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திற்காக தான் இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பது அந்த மக்களுக்கு தெரியும். அவர்களுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதும் தெரியும்" என்று துறை வைகோ தெரிவித்தார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் திமுகவின் சூரியன் சின்னத்தில் தான் மதிமுக வேட்பாளர்கள் போட்டியினர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிக்கு சீட் ஒதுக்கப்படுமா என்பதே சந்தேகம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

நிலைமை இப்படி இருக்க பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று துரை வைகோ கூறி இருப்பது அவரின் அசாத்திய தன்னம்பிக்கையை வெளிக்காட்டுவதாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Election MDMK Durai Vaiko DMK Alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->