தமிழக மக்களின் தீர்ப்பு - தோல்விக்குப்பின் அண்ணாமலை சொன்ன வார்த்தை! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி சந்தித்தது. 

இருப்பினும் கடந்த தேர்தலை போல் அல்லாமல், இந்த முறை பாஜக டபுள் டிஜிட்டில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி கொண்டுள்ளது.

லமேலும் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடித்தும் அசத்தியுள்ளது. நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்கிய மத்திய அமைச்சர், முன்னாள் ஆளுநர்,  மாநிலத் தலைவர் என அனைவரும் தோல்வியை சந்தித்த நிலையில், தோல்விக்கு பின் இன்று மதியம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், "தமிழக மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். நம் மக்கள் எப்போதும் சிந்தனை செய்து தான் ஒரு தீர்ப்பை கொடுப்பார்கள். 

நாங்கள் எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதேபோல் மக்கள் அதிக படுத்தி உள்ளனர். 

தமிழகத்தில் பாஜக வளந்துவிட்டது. இதை எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliment election TN BJP Annamalai 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->