தொடர் விடுமுறை - பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள்.!
passangers croud increase in chennai bus stands
நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையான இன்று வியாழக்கிழமை என்பதாலும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல ஏதுவாக அதிகளவு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க உள்ள நிலையில், தனியார் பேருந்துகள் தங்களது கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
இந்தக் கட்டண உயர்வால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களிலும் இன்று அதிகளவு பயணிகள் பயணம் செய்கின்றனர். ரயில்களில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், பேருந்துகளில் பயணிக்கவும் ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் விமானங்களும் தங்களது கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளன. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
passangers croud increase in chennai bus stands