சென்னையில் தடம் புரண்ட பயணிகள் ரயில்.. நள்ளிரவில் திடீர் பரபரப்பு.. ரயில்வே போலீசார் தீவிர விசாரணை..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வாரம் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதியை விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர சம்பவத்திற்கு பிறகு பல்வேறு சமயங்களில் தொடர்ந்து ரயில் விபத்து சம்பவங்களும், தடம்புரண்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ரயில் விபத்து ஏற்பட்ட ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் ரயில்வே பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சரக்கு ரயில் மோதியதில் 6 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

அதே போன்று அதே ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் செல்லும் மலை ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் அனைவரும் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து ரயில் விபத்து மற்றும் தடம் புரளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிரிட்ஜ் பணிமனை அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தடம் புரண்டதால் பரபரப்பு தோற்றுக் கொண்டது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்ற போது நிகழ்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக அவ் வழிதடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

நள்ளிரவில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் நிலைநிறுத்தப்பட்டு பணிமனைக்கு ஜன சகாப்தி எக்ஸ்பிரஸ் சென்று அடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ரயிலில் பயணிகளிலேயே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passenger train derailed in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->