கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையத்தால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல்பாட்டிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படுகிறது. 

இருப்பினும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடுமுறை நாட்களில் ஒரே நேரத்தில் பலரும் சொந்த ஊருக்குத் திரும்ப முற்படும் போது கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கிறது. போதிய பேருந்துகள் இல்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே ஒரு ஏ.டி.எம். மட்டுமே உள்ளதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passengers wait money withdraw in kilambakkam bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->