சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் ஹவர்ஸ் மின் கட்டணம் குறைப்பு.!!
Peak hours electricity charges reduced for small and micro companies
தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிக மின் பயன்பாட்டு நேரங்களில் மட்டும் மின்சார கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட அளவு உயர்த்தி இருந்தது. இதனை கண்டித்து தமிழக முழுவதும் சிறு குறு நிறுவனங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் சிறு, குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறுகுரு நிறுவனங்களின் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டங்களை அடுத்து மின்சார வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி சிறு, குறு நிறுவனங்களின் மின் பயன்பாட்டை பொறுத்து 15 முதல் 25 சதவீதம் வரை மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க்கிங் கட்டணம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு 191.10 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுவதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.
English Summary
Peak hours electricity charges reduced for small and micro companies