ஹெல்மட்அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதா?  நேருMLA கண்டனம்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் செயற்கையாக நடைபெறும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் ஹெல்மட் (Helmet) அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது கண்டனத்துக்குரியது என சட்டமன்ற உறுப்பினர் நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  சட்டமன்ற உறுப்பினர் நேரு கூறியிருப்பதாவது:புதுச்சேரி நகரப்பகுதியில் செயற்கையாக போக்குவரத்து நெரிசல் என்பது தினந்தோறும் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையோ. போக்குவரத்து துறையோ. பொதுப்பணித்துறையோ நடவடிக்கை எடுக்காததால் இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் விபத்துக்குள்ளாவது வேதனையளிக்கிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நகரப்பகுதியில் மின்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை போன்ற அரசு துறைகள் சாலைகளை பிளந்து மின் கேபிள்கள். குடிநீர் குழாய்கள் பதித்துவிட்டு அப்படியே விட்டு சென்று விடுகிறார்கள். அந்த சாலைகள் மண் சாலைகளாக மாறுவதுடன் அந்த இடம் மண்மேடுகளாக காட்சியளிக்கிறது. இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இதை பலமுறை சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட துறையினர் அதை உடனடியாக சரிசெய்யாமல் காலம்தாழ்த்துகிறார்கள். இப்படிப்பட்ட சாலைகளை சம்பந்தப்பட்ட துறையினர் தார் ஊற்றி Patch Work செய்கிறோம் என்ற போர்வையில் சாலைகளை சரியாகவும், சமமாகவும் செய்யாமல் மேடும், பள்ளமுமாக சாலைகளை மாற்றி விடுகிறார்கள். இப்படி இருக்கும் சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் போது எப்படி விபத்து நேரிடாமல் இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் உணர வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடைபாதை ஆக்கிரமிப்பு மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு நடவடிக்கையில் இறங்கும் சம்பந்தப்பட்ட துறையினர் அந்த நேரத்தில் மட்டும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டதாக கூறி அடுத்த நாளே அங்கு ஏற்படும் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு சாலையின் நடைபாதைகளையும் கடைகள் வைத்து இருப்பவர்கள் ஆக்கிரமித்து இருப்பதுடன் அவர்களின் விளம்பர பலகைகளை சாலையில் வைத்து போக்குவரத்திற்கு இடையூறாக இருக்க செய்வதை கூட சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுக்கொள்வதில்லை. இதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சாலையின் ஓரத்தில் உள்ள L வடிவ வாய்க்கால்கள் மற்றும் U வடிவ வாய்க்கால்கள் சேரும், சகதியுமாக. சிதைந்து இருப்பதுடன் அவைகள் சாலை மட்டத்திற்கு இல்லாமல் ஏற்றமும், இறக்கமுமாக இருப்பதால் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாகனஓட்டிகள் வாய்க்கால்கள் ஓரம் நிறுத்த முடியாமல் பல அடிதூரம் தள்ளி சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் உணர்ந்து அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் பார்வையின்படி போக்குவரத்துதுறை மற்றும் காவல்துறைக்கு  சட்டமன்ற உறுப்பினர் நேருவேண்டுக்கோள் விடுத்துள்ளார்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Penalty for not wearing helmets? Nehru condemns!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->