அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அபராதம்; நீதிமன்றம் யோசனை..! - Seithipunal
Seithipunal


தமிகக்கத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம் என்ற யோசனையை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ளது. 

இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 2013 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் அரியலூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சிவசங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் மீது நீதிபதி இளந்திரையன் விசாரணை நடத்தினார். குறித்த போராட்டங்கள் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்டதாக கூறி அவற்றை தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும், இந்த விசாரணையின் ஒருபகுதியாக, இதுபோன்று அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டதாக அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தின் சுமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக உடனடி அபராதம் விதிக்கலாமே என்ற யோசனையையும் தமிழக அரசுக்கு நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Penalty for protesting without permission Court suggests


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->