குடும்பம் குடும்பமாக குவியும் மக்கள்! சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடித்தது!
People flocking to the family Diwali firecracker sales are heating up in Chennai Island
சென்னையில் தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், தீவுத்திடலில் பட்டாசு விற்பனை மிகுந்த உற்சாகத்தில் துவங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்கள் ஆர்வமாக தங்களது கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் திரண்டு வந்து தீவுத்திடலில் பட்டாசுகளை வாங்கினர்.
பெரிய மற்றும் சிறிய பட்டாசு நிறுவனங்கள் தங்களது ஸ்டால்களை தீவுத்திடலில் அமைத்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருத்தமான வகையில் பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன. இதில் சில்லறை விலை மட்டுமின்றி, மொத்த விலையிலும் பட்டாசுகளை வாங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, பட்டாசு கிப்ட் பாக்ஸ் அதிக அளவில் வந்துள்ளது, அதனால் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுவாக கிடைக்கும் பட்டாசுகளில், கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, சாட்டை, தரைச்சக்கரம், பயர் பென்சில்ஸ், மேக்னடிக் டார்ச்சஸ், பாம் ராக்கெட் உள்ளிட்ட 30 முதல் 75 வகை பட்டாசுகள் கொண்ட கிப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு உள்ளன.
30 வகை பட்டாசுகள் கொண்ட கிப்ட் பாக்ஸ் – ரூ.850 ,40 வகை பட்டாசுகள் கொண்ட கிப்ட் பாக்ஸ் – ரூ.950 ,50 வகை பட்டாசுகள் கொண்ட கிப்ட் பாக்ஸ் – ரூ.1,300 ,75 வகை பட்டாசுகள் கொண்ட கிப்ட் பாக்ஸ் – ரூ.3,200 ,குழந்தைகளுக்கான 55 வகை பட்டாசுகள் கொண்ட கிப்ட் பாக்ஸ் – ரூ.1,300
தீபாவளி கொண்டாட்டத்திற்கு பூரணமான தயாரிப்புடன் மக்கள் தீவுத்திடலில் பட்டாசுகளை ஆர்வமாக வாங்கி கொண்டுள்ளனர்.
English Summary
People flocking to the family Diwali firecracker sales are heating up in Chennai Island