மக்கள் விரும்பி உண்ணும் அரிய வகை அரிசி..கருப்புக்கவுனி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்வேறு விதமான ரகங்களில் பாரம்பரிய அரிசி வகைகள் நிறைய உள்ளன. அவற்றில் முக்கியமான இடத்தில் உள்ளது கருப்புக்கவுனி அரிசி. மற்ற ரக அரிசிகளில் இருந்து மிகவும் மாறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ள இந்த கருப்புக்கவுனி அரிசி உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் இந்த கருப்புக்கவுனி அரிசியானது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. முன்னதாக பழங்காலத்தில் கருப்புக்கவுனி அரிசியை அரச குடும்பத்தில் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்து இருந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த அரிசியை மற்ற ரக அரிசிகளை சமைப்பது போல் அவ்வளவு எளிதில் சமைத்து விட முடியாது. எனவே தான் வீடுகளிலும், வெளியில் கடைகளிலும் இந்த அரிசியில் சமைத்த உணவுகளை காண முடிவதில்லை. ஆனால் இந்த அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் கேத்தரின் என்ற பெண் கருப்புக்கவுனி அரிசியில் செய்த புட்டு, கஞ்சி ஆகிய உணவுகளை காலை உணவாக 20 முதல் 40 ரூபாய்க்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 

இதுகுறித்து பேசிய கேத்தரின், " நான் கடந்த 20 ஆண்டுகளாக கருப்புக்கவுனி அரிசியில் காலை உணவு தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இதன் நன்மைகளை அறிந்த பலரும் என்னிடம் வாடிக்கையாளராக உள்ளனர். இந்த அரிசியில் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உள்ளன" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people love to eat Karupkauni


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->