புதிய விமான நிலையத்திற்கு வெடித்த எதிர்ப்பு.! பரந்தூர் மக்கள் மொட்டை அடித்து - திருவோடு ஏந்தி போராட்டம்!
People of Parantur protested against the new airport by shaving their heads and carrying Thiruvodu
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஏகனாபுரம் மக்கள் கடந்த 263 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் தமிழகம் வந்த பிரதமரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரத்தைச் சார்ந்த மக்கள் மொட்டை அடித்து திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு மொட்டை அடித்து நாமமிட்டு ஊர்வலமாக வந்து அந்தப் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலை முன்பு கூடி நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மொட்டை அடித்துக் கொண்டு திருவோடு ஏந்தி சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். பின்னர் அவ்வழியாக வந்த அரசு பேருந்தில் ஏறி அங்கிருந்து பயணிகளிடம் திருவடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
English Summary
People of Parantur protested against the new airport by shaving their heads and carrying Thiruvodu