திருச்சி : சாராயக்கடை சந்து என்ற தெரு பெயரை மாற்றச் சொல்லி மக்கள் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


திருச்சி : சாராயக்கடை சந்து என்ற தெரு பெயரை மற்றச் சொல்லி மக்கள் கோரிக்கை.!

திருச்சி மாவட்டத்தில் லால்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாராயக்கடை சந்து என்ற தெரு ஒன்று உள்ளது. இந்தத் தெருவில் உள்ள ஒரு தோப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாராயக் கடை இருந்ததால் அந்த தெரு "சாராயக்கடை சந்து" என்று அழைக்கப்பட்டது.  தற்போது அந்தத் தெரு நல்ல வளர்ச்சி பெற்ற தெருவாக உள்ளது. 

இருப்பினும் அந்த தெருவின் பெயர் இன்னமும் சாராயக் கடை சந்து என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பெயரே அரசின் பதிவேடுகளிலும் உள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் அரசு மதுபான கடை கூட இல்லாத நிலையில் தெருவின் பெயரை மாற்ற வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள நகராட்சி பெயர் பலகையிலும் சாராயக்கடை சந்து என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் பலகை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

தற்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சரான கே.என்.நேருவின் சொந்த ஊரான கானக்கிளிய நல்லூர் இந்த நகராட்சி பகுதியில் தான் உள்ளது. இவர் மனது வைத்து சாராயக் கடை சந்து என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், விலாசம் சொல்வதாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்புகளுக்கு முயற்சிக்கும் போதும் சரி,  இத்தனை வருடமாக இந்த தெரு பெயரால் தங்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது. அதனால், விரைவில் இந்தத் தெருவின் பெயரை மாற்றி, தற்போது வைக்கப் பட்டிருக்கும் பெயர் பலகையை அகற்ற  வேண்டும் என்று அப்பகுதி கேட்டுக் கொண்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people protest for sarayakadai santhu street name change in trichy lalkudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->