தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க கூடாது - பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!!
peoples dont take selfie on train track police warned
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க கூடாது - பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!!
கடந்த இரண்டாம் தேதி இரண்டு வாலிபர்கள் மதுபோதையில் திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் அந்த வழித்தடத்தில் வந்த பிளாஸ்பூர் விரைவு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல், கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி வாழப்பாடி - ஏத்தாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதனால், இதனைத் தடுக்கும் விதமாக மக்களிடையே தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. தண்டவாளங்கள் என்பது ரெயில்கள் செல்வதற்கு மட்டுமே.
அதில் மக்கள் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில் செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களால் பலர் உயிரை இழக்க நேரிடுகிறது. ஆகவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
peoples dont take selfie on train track police warned