#தேனி || தனியார் மகளிர் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து மர்ம மரணம்? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், பெரியகுளம் தாமரைக்குளத்தில் தனியார் மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், டி.கள்ளிப்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஜெனிலியா(வயது 17) வேதியியல் பிரிவில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 17-ம் தேதி கல்லூரியின் விளையாட்டு தினத்துக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்த மாணவி ஜெனிலியாவை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர்.

மாணவி ஜெனிலியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மாணவியின் மரணம் குறித்து தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், மாணவியின் மரணம்குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periyakulam private college girl mystery dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->