சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..கடுப்பான மதுரை தம்பிகள்! - Seithipunal
Seithipunal


மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறஇருந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியது. இந்த  பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி  சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தத்ததுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்த நிலையில் அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர் தலத்தை அழித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை (13-ந்தேதி) நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்து வந்தனர். போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Permission denied for Seeman protest Angry Madurai brothers


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->