#தேனி || வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த நபர் கைது.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில் சிசிடிவி கேமரா மற்றும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தேனி தொகுதியில் பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மவார் சங்கம் கல்லூரி வளாகத்தில் அத்துமீறி இரு சக்கர வாகனத்தில் நுழைய முயன்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்தி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் கைது செய்துள்ளனர்.

அந்த நபரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வாக்கு எண்ணும் மையத்தில் நுழையும் முயன்றது கல்லூரியின் முன்னாள் ஊழிய ராஜேஷ் கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது.  அவர் எதற்காக அத்துமீறி வாக்கு எண்ணும் மையத்தில் நுழைய முயன்றார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Person arrested for trespassing in theni vote counting center


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->