ராணிப்பேட்டை: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்!
Petrol Bomb Attack gunshot Arrest police
ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஹரி என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது குற்றவாளி ஹரி என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Petrol Bomb Attack gunshot Arrest police