திருமூர்த்தி மலையில் சாரல் மழை.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.! - Seithipunal
Seithipunal


திருமூர்த்தி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதில் குளித்து மகிழ தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். ஆனால் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அனைவரும் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மலைப் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது. அதுமட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் அந்த பகுதியில் நிலவிய நிலையில் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Picnicers not allowed in thirumoorthy hills


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->