விஜய்க்கு எதிரான பிரச்சாரத்துக்கு திட்டமா? அரசியலா அல்லது திரைப் பயணமா? மீண்டும் அரசியல் மேடையில் வடிவேலு....
plan to campaign against Vijay Politics or film tour Vadivelu on the political stage again
சினிமாவில் உச்சகட்ட காமெடி நடிகராகத் திகழ்ந்தவர் வடிவேலு. இவர் தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் தி.மு க.வுக்கு நட்சத்திரப் பேச்சாளராக வலம் வந்தார். மேலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை மேடைக்கு மேடை வசைப்பாடினார். ஆனால் அ.தி.மு.க வெற்றிப் பெற்று ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி ஏற்றார். மேலும் எதிர்க்கட்சித் தலைவராகத் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பொறுப்பேற்றார்.

தி.மு.க நடிகர் வடிவேலு:
இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வெற்றிப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இதனால், "மாமன்னன்" என்ற படத்தில் 10 ஆண்டுகள் கழித்து நடித்தார். அதன்பிறகு தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர் முனைந்து வரவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி சென்னை யானைக் கவுனியில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு, " 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வருவார் " எனத் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் போதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் அழைப்பின் பேரில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இது தி.மு.க கட்சியின் ஒரு திட்டமாகக் கருதப்படுகிறது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம்:
ஏனென்றால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் களம் இறங்குவதால், அவருக்கு எதிராக வடிவேலுவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசிப்பது தெரிய வருகிறது. அதற்கான முன்னேற்பாடாகத்தான் வடிவேலுவை மேடையில் ஏற்றினார்களா?என்று தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அரசியல் பயணமா? திரைப் பயணமா? இதில் எதை நடிகர் வடிவேலு கையில எடுக்கப் போகிறார் என்பதை மக்கள் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
English Summary
plan to campaign against Vijay Politics or film tour Vadivelu on the political stage again