காலை உணவு வழங்கும் திட்டம்-சத்துணவு ஊழியர்கள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal



வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்  மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் சீனிவாசன் (ராணிப்பேட்டை), பியூலா எலிசபத்ராணி (வேலூர்), சேகரன் (திருப்பத்தூர்) ஆகியோர் தலைமை தாங்கினர். 

மேலும்,செயலாளர்கள் மலர், ராமமூர்த்தி, வித்தியபதி ஆகியோர் முன்னிலை வகித்து இப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரவி கலந்து கொண்டு  பல்வேறு  கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளார். 

இப்போராட்டத்தில் அவர் பேசியதில், தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும் என்றும் தனியார் குழுக்களுக்கு வழங்கக்கூடாது என்றும், முறையான காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். மேலும் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plan to provide breakfast-nutrition workers strike..!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->