மதுபாட்டிலில் மிதந்த பிளாஸ்டிக் துண்டு - அதிர்ச்சியில் மதுபிரியர்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் நேற்று மதுப்பிரியர் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த மதுபாட்டிலுக்குள் பிளாஸ்டிக் துண்டுகளும், இறந்த நிலையில் புழுக்களும் மிதந்துள்ளது. 

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நபர் சம்பவம் குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறாமல் பாட்டிலை திரும்ப பெறுவதிலேயே குறியாக இருந்துள்ளார். இதையடுத்து மதுபிரியர் அந்த பாட்டிலுடன் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். 

ஆனால் இந்த புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறி அவரை போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால், அதிருப்தி அடைந்த அந்த நபர் சம்பந்தப்பட்ட அந்த பாட்டிலை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவவிட்டார். 

இதை பார்த்த மற்ற மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plastic paper and insects in liquar bottle


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->