புத்தாண்டு பரிசாக பாம்புடன் விளையாட்டு.. விளையாட்டு விபரீதமாகி உயிர் போன பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் மணிகண்டன் எனபவர் கலந்து கொண்டார்.

கொண்டாட்டங்களின் போது அருகில் கண்ணாடி விரியன் வகையை சார்ந்த பாம்பை கண்டவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் மணிகண்டன் அதை எடுத்து விளையாடியுள்ளார். அப்போது பாம்பு சட்டென்று அவரைக் கடித்துள்ளது. 

இருந்தும் அந்த பாம்பை கையில் பிடித்து கொண்டு ஒவ்வொரிடமும் சென்று இதுதான் புத்தாண்டு பரிசு என அருகில் இருந்தவர்களிடம் காட்டினார். இதனையடுத்து அவர திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார். மணிகண்டனுடன் இருந்த கபிலனையும் பாம்பு கடித்துள்ளது. கபிலன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Playing with snakes as a New Year gift


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->