பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா.. தமிழகத்தில் மாட்டுவண்டி, குதிரைப் பந்தயம் நடத்த அனுமதி கோரி மனு.!
PM modi birthday Rackla race and horse race in nellai
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் மாட்டுவண்டி , குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கு, மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக பாஜகவினர் சகல ஏற்பாட்டையும் ஆரம்பித்து உள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இதனை குறித்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இது குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.பி பதில் அறிக்கையை அடிப்படியாக கொண்டு அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
English Summary
PM modi birthday Rackla race and horse race in nellai