ஆரம்பமே தடங்கல் - மோடியின் சென்னை பயணம் என்ன தான் ஆச்சு? இதுதான் உண்மை காரணமா? - Seithipunal
Seithipunal


வரும் 20ஆம் தேதி தமிழகம் வருகை தரவிருந்த பிரதமர் மோடியின் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயணம் ரத்தானது குறித்து ரயில்வே துறையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. 

மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற உடன், தனது முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில், நாகர்கோவில்-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரயிலை தொடங்கி வைப்பதற்காக வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதுடன், பேசின்பாலம் யார்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்புக்காக, பணிமனையை அமைக்க அடிக்கல் நாட்டவும் உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், ஆரல்வாய்மொழி - நாகர்கோவில், மேலப்பாளையம் - திருநெல்வேலி இடையே நிறைவடைந்த இரட்டைப்பாதை திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கி வைக்க இருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த தமிழக பயணம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக, பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி பின்னர் நடைபெறும் என்றும் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Chennai Trip Cancel june 2024


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->