ஓடி ஒளியாதீங்க ஸ்டாலின்! மக்களை ஏமாற்றாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் - டாக்டர் இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்துக்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்ட வேண்டும் என்று, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ் தெரிவித்ததாவது, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் தொடர்பாக 9.99 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்மூலம் 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு வந்த புதிய தொழில் முதல் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே நான் அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிகிறார்.

இன்றைக்கு மரபு இல்லை என்று சொல்லக்கூடிய இதே முதல்வர் ஸ்டாலின் தான், அதிமுக ஆட்சி காலத்தில் தொழில் துறை முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஆயிரம் முறை கோரிக்கை வைத்தார். அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் இந்த கோரிக்கையை வைத்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு 9.99 லட்சம் கோடி ரூபாய்க்கு தொழில்கள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், தற்போது வரை 17,616 கோடி ரூபாய்க்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே வராத முதலீடுகளை வந்ததாக கூறி தமிழக மக்களை ஏமாற்றாமல், வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என்று ஓடி ஒளியாமல், இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMD Dr Ramadoss condemn to TN Govr CM Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->