'சந்து கடை' என்ற சட்டவிரோத சாராயக் கடை! யாரு கேட்டா டாஸ்மாக் கடை திறக்க சொல்லி - அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆதனூர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 பேர் கொண்ட ஒரு குழு, ஆதனூர் பகுதியில் புதிய டாஸ்மார்க் மது கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக நேற்று டாஸ்மாக் மதுகடை வேண்டுமென்று மனு கொடுத்தவர்களில் பெண் ஒருவர், தங்களை ஒரு சிலர் காசு கொடுத்து அழைத்து சென்றதாகவும், மது கடை வேண்டாம் என்பதற்காகத் தான் அழைத்து சென்றதாகவும், ஆனால் அங்கு எங்களை மாற்றி பேச சொல்லி அவர்கள் கட்டாயப்படுத்தியதாகவும் அந்த பெண் பேட்டி அளித்துள்ளார். 

இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராம மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானதாகும். 

வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுப்பதாகக் கூறி, மக்களை பணம் கொடுத்து அழைத்துச் சென்று, டாஸ்மாக் கடை கோரும் மனுவை ஏமாற்றி கொடுக்க வைத்துள்ளனர். இது கண்டனத்துக்குரிய செயல்.

தருமபுரி மாவட்டத்தில் 'சந்து கடை' என்கிற பெயரில் ஏராளமாக நடந்துவரும் சட்டவிரோத சாராயக் கடைகளைத் தான் மக்கள் எதிர்க்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை திறக்குமாறு யாரும் கேட்கவில்லை" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Condemn to Dharmapuri villagers Tasmac liquor shop issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->