நம்பிக்கையோடு இருந்தோம், ஏமாற்றம்தான் கிடைத்தது - பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி! - Seithipunal
Seithipunal


இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தாவது, "வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தகர்த்துள்ளது.

ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. அனைத்து பிரிவு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைத்துள்ளதா என்பதை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

டாஸ்மாக் கடையை ஒழிக்க வேண்டும், பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று நம்பிக்கையோடு இருந்தோம் அதுக்கும் ஏமாற்றம்தான் கிடைத்தது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும். குறைந்தபட்சம் 100 நாட்களாவது பேரவை நடக்க வேண்டும். ஆனால் ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

முன்னதாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து ஜி.கே.மணி தெரிவிக்கையில், சட்டப்பேரவையில் இடஒதுக்கீட்டுக்கான பிரச்சினை குறித்து பேசியபோது, “பிஹார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை’ என்ற உண்மைக்கு மாறான தகவலை தமிழக முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் பேசி உள்ளனர். இது சட்டப்பேரவை விதியை மீறிய செயலாக கருதி அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி உள்ளேன். 

மேலும், அமைச்சர் சிவசங்கர், குரூப் 1-ல் உள்ள முக்கிய உயர் பதவிகளில் 10.5 க்கு மேல் இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை நிரூபித்தால், நான் இன்றே சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அரசியல் பொதுவாழ்வில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் அமைச்சர்கள் பதவி விலகுவாரா? 

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான புள்ளி விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்" என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK GK Mani Say About Vanniyar Reservation and TASAMC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->