கள்ளச்சாராய பலிக்கு 2 எம்.எல்.ஏ.கள்தான் காரணம்! " எங்க கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு " - அன்புமணி!
PMK leader Anbumani campaign in Vikravandi
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் திமுக எம்எல்ஏ வழக்குகளை சந்திக்க தயாராக உள்ளதாகவும் அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணி ஆதரித்து ராதாபுரம் பகுதியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நமக்கு சமூக நீதி கிடைக்க இந்த இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பு. பாமக வெற்றி பெற்றால் பின்தங்கிய சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம் முன்னேறும், நமக்கு சமூக நீதி கிடைக்கும், அடுத்த மாதமே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் இது உறுதி தமிழ்நாட்டில் வாழ்க்கை பிரச்சனை விக்கிரவாண்டி தொகுதி மக்களின் கையில் உள்ளது.
கள்ளக்குறிச்சி நடந்த கள்ளச்சாராய சம்பவம் வெக்கக்கேடானது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் சாராயம் குடித்து இறந்தனர். அப்போது கூட இந்த அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இதற்கு ஆளுங்கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் தான் காரணம்.
அங்கு இருக்கிற இரண்டு எம்.எல்.ஏ.க்கள்தான் காரணம் என பள்ளி குழந்தை கூட சொல்லுகிறார்கள். இவர்கள் நம் மீது வழக்கு போடுகிறார்கள். நாங்கள் சந்திக்க தயாராகத்தான் இருக்கிறோம். எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. தேவைப்பட்டால் ஒவ்வொன்றாக வெளியிடுவோம்.
58 உயிர்களை இறந்த பிறகுதான் கைது நடவடிக்கை சாராய ஒரு லைப் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறோம். சிபிஐ விசாரணை நடந்தால்தான் கடந்த 30 ஆண்டுகளாக யார் யார் சாராயம் இருக்கிறார்கள் யாரெல்லாம் ஆதரவாக இருக்கிறார்கள் என்ற முழு விவரம் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK leader Anbumani campaign in Vikravandi