நாய்,மாட்டுக்கு கணக்கெடுப்பு! சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமுடியாதா? அன்புமணி ஆவேசம்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை பீகார் நீதிமன்றம் தடை செய்துள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொய்யான செய்தியை தெரிவித்துள்ளார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சமூகம் குறித்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீது சில கேள்விகளை முன் வைக்கிறேன். மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் மட்டுமே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பீர்கள் என்பது எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் எந்த அடிப்படையில் 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை உருவாக்கினார். எந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அருந்ததியருக்கும் இஸ்லாமியருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என மீண்டும் மீண்டும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார். சட்டநாதன் ஆணையம் 1969 முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நியமனம் செய்யார். சட்டநாதன் ஆணையத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது. அதனை குப்பையில் தூக்கி வீசி விட்டார்கள்.

வன்னிய சமுதாயத்தையும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையும் முன்னேற்றாமல் தமிழ்நாடு முன்னேறாது. போக்குவரத்து துறைக்கு கணக்கெடுப்பு, மகளிர் உரிமைத்தொகைக்கு கணக்கெடுப்பு, தெருல இருக்க நாய்களுக்கும், மாடுகளுக்கும் கணக்கெடுப்பு நடத்தும் போன்கள் ஏன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தயங்குகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk leader anbumani ramadoss press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->