இராமசாமி படையாட்சியாரின் 107-ஆம் பிறந்தநாளில் அவரின் பணிகளை போற்றி வணங்குவோம் - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


இராமசாமி படையாட்சியாரின் 107-ஆம் பிறந்தநாளில் அவரின்  பணிகளை போற்றி வணங்குவோம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விடுதலைப் போராட்ட வீரரும்,  பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக, நாடு விடுதலை அடைந்தகாலத்திலேயே குரல் கொடுத்தவருமான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 107-ஆம் பிறந்தநாளில் அவரது பணிகளையும், சிறப்புகளையும் போற்றுவோம். வணங்குவோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இராமசாமி படையாட்சியாரின்  பிறந்தநாளில் அவரின்  சமூகநீதி முன்னெடுப்புகளை போற்றுவோம்!

 இந்திய  விடுதலைக்காக இளம் வயதிலேயே  போராடியதுடன், சமூக விடுதலைக்காகவும்  குரல் கொடுத்த  பெருமைக்குரிய  பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 107-ஆம் பிறந்தநாள் இன்று.  இந்த நாளில் பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட  முன்னெடுப்புகளை  போற்றுவோம்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK SocialJustice Dr Ramadoss wish Ramasamy Padaiyatchiyar Birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->