விஷ சாராய விவகாரம்... தமிழகத்தை சுத்துபோட்ட போலீசார்! 876 பேர் அதிரடி கைது.!
Poisonous liquor issue Tamil Nadu police raided
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்தவர்கள் 54 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 100 கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதை பொருள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் உத்தரவை அடுத்து தமிழக முழுவதும் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி, துறையூர் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பது குறித்து உளவு துறைக்கு அளித்த புகாரின் அடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கள்ளச்சாராயத்தை இனி குடிக்க மாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் மட்டும் 876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4657 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Poisonous liquor issue Tamil Nadu police raided