கோவை அருகே போலீஸார் போல் நடித்து லாரி ஓட்டுனரை மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


கோவை அருகே போலீசார் போல் நடித்து லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஒடிசாவை நோக்கி லாரியில் சென்று கொண்டிருக்கும்போது கோவை மதுக்கரை அருகே உணவகம் ஒன்றில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்பொழுது நாகராஜனை போலீசார் என கூறி வந்த கும்பல் லாரியின் ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி நாகராஜனை மிரட்டி அவரிடமிருந்து 1100 ரூபாயை வாங்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகமடைந்த நாகராஜன் மதுக்கரை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த முகமது அலி, பாஷா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து உள்ளனர். இவர்கள் போலி அதிகாரிகள் என்பதும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested Gang who pretend as police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->