பெண்ணை தாக்கி செல்போம் பறிப்பு.. மூவர் கைது..! - Seithipunal
Seithipunal


பெண்ணை தாக்கி செல்போனை பறித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டைய சேர்ந்தவர் கமலி.  இவர் அந்த பகுதியில் உள்ள  பிரிட்டிங்க் பிரேஸில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் காசிமேட்டில் உள்ள கடற்கரை ஓரம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் கமலியை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர், அவரை  கத்தியால் வெட்டிவிட்டு அவரது கையிலிருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து காவல்துறையிடம் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்  அதேபகுதியை சேர்ந்த முகேஷ், கார்த்தி, பரத் ஆகிய மூவரை கைது செய்து நீதின்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested three youth who involved in robbery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->