ரோகிணி திரையரங்கில் மீண்டும் பரபரப்பு - விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி.! - Seithipunal
Seithipunal


விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்காததை அடுத்து, ஒன்பது மணி முதல் படம் திரையிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் லியோ படம் திரையிடப்பட உள்ள நிலையில், ரோகிணி தியேட்டர் நிர்வாகம் தங்களது திரையரங்குகளில் லியோ வெளியாகாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

இந்த நிலையில், ரோகிணி திரையரங்கில் ’லியோ’ படத்தை திரையிடுவது தொடர்பான பிரச்சினைக்கு நேற்று மாலை தீர்வு காணப்பட்டது. அதன் பின்னர் ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு தியேட்டர் முன்பு குவிந்தனர். அப்போது ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைப்பார்த்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். ரோகிணி திரையரங்கில் ’லியோ’ பட டிரெய்லர் வெளியீட்டின்போது குவிந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கின் நாற்காலிகளைச் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police attack vijay fans in chennai rohini theatre


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->