பதற்றத்தில் சென்னை! ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளதாக தகவல் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கடந்த ஜூலை 5ஆம் தேதி மாலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கோலை தொடர்பாக இதுவரை 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவங்கடம் காவல் அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்று உள்ளார்.

இதனால் சென்னை மாதவரம் போலீசார் தப்பி ஓட முயன்ற ரவுடி திருவங்கடத்தை சுட்டுக்கொலை செய்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police encounter Thiruvenkadam rowdy who was arrested in Armstrong murder case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->