தொடர் நகை பறிப்பு - சென்னையில் கொள்ளையன் மீது என்கவுண்டர்..!
police encounter to robbery man in chennai
சென்னை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஜாபரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது பல்வேறு மாநிலங்களில் செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது ஜாபர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து ஜாபர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
English Summary
police encounter to robbery man in chennai