திருச்செந்தூரில் பரபரப்பு.. கடற்கரையில் கிடந்த மர்ம பொருள் - அலறயடித்து ஓடிய பக்தர்கள்.!
police found in myterious object in tiruchenthur murugan temple
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோவில். இந்தக் கோவிலுக்கு தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்படும். பக்தர்கள் முருக பெருமானை தரிசனம் செய்வது மட்டுமல்லாமல், திருச்செந்தூர் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடிவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், விடுமுறையாக இன்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் நீராடிவிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் வெடிகுண்டு தோற்றத்தில் மர்மபொருள் ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி, போலீசார் விரைந்து வந்து அந்த மர்மபொருளை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த மர்மப்பொருள் நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால், போலீசார் மிக கவனமாக அதை அப்புறப்படுத்தினர்.
அதே வேளையில், அந்த மர்மபொருள் கடந்த வாரம் கோவிலில் நடைபெற்ற சப்பர பவனி திருவிழாவின் போது போடப்பட்ட வெடியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த மர்மப்பொருள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
police found in myterious object in tiruchenthur murugan temple