எம். ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது.!  - Seithipunal
Seithipunal


கரூரில் 100 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரித்த போது, ஆய்வாளர் பிரித்விராஜ் அதுபோன்று சான்று கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பிரித்விராஜ் தாம்பரம் காவல் நிலையத்திற்கு மாற்றம் வாங்கி சென்றுள்ளார். ஆனால், பிரித்விராஜ் இதுவரைக்கும் தாம்பரம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer arrest in mr vijayabaskar fraud case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->