கடலூர் கொடூரம் : செல்போன்கள் பார்மெட் செய்யப்பட்ட நிலையில்.. சிசிடிவியில் சிக்கிய முக்கிய தடயம்..!!
Police Recovered a Clue in 3 People Burnt Murder in Cuddalore
கடலூர் மாவட்டத்தில் ஐடி ஊழியர் ஒருவர் தனது மகன் மற்றும் தாயுடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஒரு முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன்குமார். 40 வயதாகும் இவர் ஹைதராபாதில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு நிஷாந்த் என்ற 10 வயது மகன் உள்ளார். இவரது மனைவிக்கும், இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித் தனியே வசித்து வந்துள்ளனர். அவரது மகன் மட்டும் சுதன்குமாருடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஹைதராபாத் செல்லும்போது தனது பெற்றோரிடம் தன் மகனை விட்டுச் செல்லும் சுதன்குமார், தனது தந்தை மறைவுக்குப் பிறகு தனது தாய் கமலேஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுதன்குமாரின் வீட்டிலிருந்து எரியும் வாடை வீசுவதாக அருகிலுள்ளோர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், வீட்டை உடைத்துச் சென்றபோது, அங்கு கமலேஸ்வரி மட்டும் வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
மேலும் வேறு வேறு அறைகளில் சுதன்குமாரும், அவரது மகனும் வெட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப் பட்டிருந்தனர். இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், உடல்களின் மீது துணிகள் போடப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுதன்குமாரின் வீட்டிலிருந்த 3 செல்போன்கள் பார்மெட் செய்யப்பட்டு தகவல்கள் அழி
English Summary
Police Recovered a Clue in 3 People Burnt Murder in Cuddalore