ரூ.25,00,000 லட்சம் மோசடி! அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி! தம்பதி மீது வழக்குப்பதிவு!
Police registered a case against a couple who cheated Rs 25 lakh by claiming to get them a job
கரூர் : வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குளித்தலை பெரியார் நகர் பகுதியில் சேர்ந்தவர் நிவேதன். இவர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். பொள்ளாச்சி சேர்ந்த மணிகண்டன் என்பவர் நிவேதனுக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இதனையடுத்து மணிகண்டன் நிவேதனிடம் தமிழ்நாடு அரசின் எர்த் ஒர்க் காண்ட்ராக்ட் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
அதனை நம்பிய நிவேதன் மணிகண்டனிடம் ரூ.25 லட்சம் கொடுத்து வேலை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். 3 ஆண்டுகளுக்கும் மேலாகியும் வேலை வாங்கித் தராததால் நிவேதனன் மணிகண்டனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மணிகண்டன் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நிவேதன் கரூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக குளித்தலை போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி லஷ்மி கமலா தேவி மீதும் வேலை வாங்கித் தருவதாக ரூ. 25 லட்சம் மோசடி செய்தாக 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Police registered a case against a couple who cheated Rs 25 lakh by claiming to get them a job