இபிஸ்-யை தலைவராக ஏற்பவர்களுடனே... அதிமுக எம்.எல்.ஏ ஜெயராமன் தடாலடி! - Seithipunal
Seithipunal


கோயமுத்தூர், பொள்ளாச்சி-பாலக்கோடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி நகர் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும் எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, தமிழகத்தில் தி.மு.க ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இந்த ஆட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். விலைவாசி ஏற்றத்தால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

ஒரு காவல்துறை அதிகாரி இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய சட்ட ஒழுங்கு சீர்கேடு இந்த ஆட்சியில் நடைபெறுகிறது. 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க தான் வெற்றி பெறும். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களுடன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியை அமைப்போம். 

அப்படி வருபவர்களை கூட்டணியில் சேர்த்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pollachi Jayaraman speech issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->